உயிரியல் முறைக்கட்டுப்பாடு :: பேரளவு உற்பத்தி செய்தல்

உயிரியல் முறை கட்டுப்பாட்டு காரணி – பேரளவு உற்பத்தி

டிரைக்கோடெர்மா விரிடி – பேரளவு உற்பத்தி

தாய் வளர்ச்சி ஊடுபொருள் கலவை தயாரித்தல்
கரும்பு சாறு நுரைமம் ஊடகம் தாயரித்தல்

  • கரும்பு சாறு  - 30 கிராம்
  • நுரைமம் – 5 கிராம்
  • வடிநீர் – 1000 மிலி

தயாரித்த ஊடகத்தை கூம்பு குடுவையில் வைத்து 151b அழுத்தத்தில் 15 நிமிடத்திற்கு அழுத்த அனற்கலனில் வைத்து கிருமி நீக்கம் செய்யவும்.
ஊடகத்தை குளிரச்  செய்து, பின் 10 நாட்கள் வயதுடைய டிரைக் கோடெர்மா பூஞ்சையை உட்செலுத்தவும். 10 நாட்களுக்குப்  பின் இதனை தாய் வளர்ச்சி ஊடுபொருள் கலவையாக பயன்படுத்தவும்.

பேரளவு உற்பத்தி :
கரும்பு சாறு நுரைமம் ஊடகம் தயாரித்து கிருமிநீக்கம் செய்யவும்.
பின் ஊடகத்தை குளிரச் செய்து, தாய் வளர்ச்சி ஊடுபொருள் கலவையை 1.5 லிட்டருக்கு, 50 லிட்டர் ஊடகம் என்றளவில் இட்டு, அறை வெப்பநிலையில் 10 நாட்களுக்கு வைக்கவும்.
தாயரித்த நீர் நொதியில் உள்ள பூஞ்சை வளர்ச்சியை சீமைச் சுண்ணாம்புக் கல்லோடு சேர்த்து விணியோகிக்கப்படுகிறது.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு |  பொறுப்புத் துறப்பு  | தொடர்புக்கு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016